காத்திருந்த காலங்கள் முடிந்தது........

ஆயிரம் பெண்கள் என்னை
கடந்தாலும்
உன் நினைவுகள் இன்னும்
என்னுள் உறங்கவில்லை!

என் தனிமையை
தாலாட்டும் சில சங்கீதங்கள்
உன் நினைவுகள் மட்டும்
சொல்கிறது!

மருதாணி கோலமிட்ட
உன் கைகள்!
அதை நீ காட்ட
வருடி பார்த்த என் கைவிரல்களின்
உணர்ச்சி அலைகள் ஆயிரம்
இன்னும் ஓயவில்லை!

நீ வருவாய் என
ஒற்றைகாலில் காத்திருந்த
காலங்கள் ஓடின!
பௌர்ணமியாய் நீ வந்த
நாட்கள் தேய்ந்தது!
நிரந்தர அம்மாவசை இன்று
நீ இல்லாத இதயம்
இறக்க துடிக்கிறது!
நிம்மதி இல்லாத உலகம்
உறங்க சொல்கிறது!

எழுதியவர் : ராஜேஷ் கண்ணா (16-Aug-12, 11:38 pm)
பார்வை : 417

மேலே