அவள் அன்புக்கு ஈடில்லை, இணையில்லை.
அன்னை அவள் காட்டும்,
அன்புக்கு ஈடு இல்லை,
பெற்ற மகன் ஒருநாள்,
பேதலித்து,குற்ற உணர்வொடு,
தான் தாயைக் கொன்று,
அவள் இதயத்தைக் கிழித்து,
கையில் ஏந்தி செல்கிறான்,
வழியில் தடுமாறி விழுகின்றான்,
கையில் இருந்த தாயின் இதயம்,
பிடித்த பிடி நழுவி கீழே விழ,
அந்தப் பெற்றவளின் இதயம்,
துடித்துப் போய் சொல்கிறது,
அன்பு மகனே உனக்கு,
அடிபடவில்லையே, நீ பார்த்து,
நடந்து செல் பாதையெல்லாம்,
மேடு பள்ளம், என்று சொல்லும்,
அந்த தாயின் இதயத்தை,
தலை வணங்கி நின்றேன்.