காதல் வறுமை

உணவின்றி இருப்பது தான்
வறுமை இல்லை

உறவின்றி இருப்பதும்
வறுமை தான்

இது காதல் வறுமை.

வரமாய் வந்தவளை விட்டு
வெறும் வெறுமையை
அள்ளி அயல்நாடு வந்தேன்

உடனிருந்து ஊடல் கொண்டாலும்
உள்ளம் களித்திருந்தேன்
தினம் பேசி நேசித்திருந்தேன்

பாசம் காட்ட பக்கம்யாருமின்றி
மனப்பசியில் இருக்கிறேன்
பரிதாபம் தான்.

எழுதியவர் : manimagan (18-Aug-12, 10:28 am)
சேர்த்தது : manimagan
Tanglish : kaadhal varumai
பார்வை : 194

மேலே