தோழியை தொலைத்த என் துயரங்கள்...

நடப்பு என்னும் வட்டத்தில் - எனக்கு
சொல்லிக்கொள்ள நண்பர் இல்லை...

கல்லூரி காலத்திலும் கைகுலுக்கும்
அளவிற்கே பழகிய நான்
உன்னுடன்மட்டும் கபடமின்றி பழகியது ஏன்..?
இன்று
இப்படி பாதியில் கலங்கி நிர்க்கதானா..?

என் மனதில் கவலைகள் ஏற்ப்பட்டபொதேல்லாம்
என் கவலைகளின் காரணத்தை - நீ
கலையவில்லை என்றாலும்
காதுகொடுத்து கேட்டதால் - என்
மனக்காயத்தின் கணம் குரைன்தது...

இதுவரை
என் கஷ்டங்களையும்,
சந்தோசங்களையும் பகிர்ந்துக்கொள்ள - நீ
என் பக்கத்தில் இருந்தாய்...
என் மனதில் இருந்ததை எல்லாம்
மறைக்காமல் உன்னுடன் பகிர்ந்து வந்தேன்
ஏன்..?
உன்னைவிட எனக்கு வேறு உறவு இல்லாமல் அல்ல...
உன்னைவிட என்னைப்புரிந்த வேறு உறவு இல்லாததால்...

ஈன்றவல்கூட இரவை தவிர மற்ற
இருவேளை கேட்டதில்லை உணவருந்த...
ஆனால்
நீ கேட்காத வேலையில்லை...
இன்று
என்னை கேட்கக்கூட உனக்கு நினைவில்லை...

என் கைப்பேசி கலகலப்புடன் இருந்ததும்
உன்னுடைய குறுந்தகவல்கள் வந்ததினால்தான்
இன்று
அவையும் ஆதரவின்றி
அமைதியாக அழுதுக் கொண்டிருக்கிறது...

சிறு சிறு சிரமங்கள் ஏற்ப்பட்டபோதேல்லாம் - என்
சிரம் சாய்ந்தது உன்னுடைய தோளினிடம் தான்...

என் மனம் அழுதபோதெல்லாம்
ஆறுதல் தந்தவள் நீ
இன்று
நீ இன்றி அழுகிறேன்
ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லா அனாதையாக...

கங்கைக்கே நீர் கடன் தருகிறது என் கண்கள்
இன்றுவரை என் கண்ணீரை துடைத்த
கரங்களைப் பிரிந்து...

என்னைவிட உனக்கு வேறு உயர்ந்த
நண்பர்கள் கிடைத்திருக்கலாம்,
புதிய உறவும் கிடைத்திருக்கலாம் -ஆனால்
உன்னைவிட எனக்கு வேறு
உறவுமில்லை, நண்பருமில்லை...

இதுவரை
என் துயரங்களை தோழி
உன்னிடம் சொல்லி வந்தேன்...
இனி உன்னைபிரிந்த துயரத்தை யாரிடம் சொல்லியழுவேன்...?
எனக்கு நானேதான் சொல்லி
அழுதுக்கொள்ள வேண்டும்...

எழுதியவர் : சிலம்பரசன். ச (20-Aug-12, 3:27 pm)
பார்வை : 531

மேலே