அணு, அணுவாய் ஆராய்ச்சி...
![](https://eluthu.com/images/loading.gif)
அணுக்கருவை பிளந்து
மனிதக்கருவை அழிக்கிறானே!
அவன் உன்மை உருவை
எவனறிவானோ?!
அவனுக்குள்
மனிதம் மரித்ததால்
மனிதனை மறக்கிறான்!!
நினைவுபடுத்த வேண்டியவனோ
மின்சாரம் முழுமையும் கேட்கிறான்!!
தயவுகூர்ந்து
அந்த மின்சாரம் முழுமையும்
தமிழக சுடுகாட்டிற்கே வினியோகிங்கள்
சிறிது, சிறிதாய் சாகடிப்பதற்க்கு
முழுதாய் எரித்துவிடலாம்
தமிழர்களை!!
நீங்களே வாழுந்துவிட்டு போங்கள்
மனிதனை மடித்து
மனிதம் மறந்து, வாழ-
நாங்கள் அறிந்ததில்லை!!
கடைசியில் ஒன்று,
மனிதன் விஞ்ஞானம் அறியலாம்
விஞ்ஞானம் மனிதனை அறியாது
என்றாவது ஒரு நாள்
உங்களையும் அழிக்கும்!!