அய்யனார் வேட்டை...!!! (கவிதை)
மதுரைக்கு தெக்கிட்டு
நாலுகாத தூரம்
ஊரொறங்கி போன சாமம்
எல்லயோரச் சாமி அய்யனார்
வேட்டக்கி போக வேகமா
தீட்டிட்டு இருக்கார் அருவாள !!
தீட்டி முடிச்ச கையோட
சாமக்கோழி கழுத்த வெட்டி
அருவா பதம் பார்த்து
வெடவெடன்னு நடந்தார் ஊரைச்சுத்தி !!
பனமரக்காட்டுல நுழைஞ்ச சாமிக்கு
மல்லிப்பூ வாசனை தீண்ட
அது யார்ரா என் காட்டுல
முனினு சாமி கோவம் கொள்ள
வீசுனாரு அருவாவ -
வாசம் வந்த தெசய நோக்கி..!!
வீசுன அருவா சிக்குன சத்தம்
சட்டுன்னு வர, ரத்தம் பாக்க
வீரமா போனார் எல்ல சாமி !!
அருவாவும் தெம்படல, ஆளும் தெம்படல.
----------------------------------------------------
விடிஞ்சதும் வந்தான் மாரியப்பன்,
சாமி இன்னக்கி ஆடு வெட்டுதம்,
அருவா தாரீகளான்னான் !! ஏலே மாரியப்பா அருவாக்கு சோளி இருக்கு அப்புறமா வா
பூச முடிச்சு தாரேன் - மீசமுறுக்கி சொன்னுச்சு சாமி தொலஞ்ச அருவாக்கு பூசமுடிக்க திரும்பி பனமரக்காட்டுக்கு கெளம்புனாரு எல்லச்சாமி !!