பேதை மனிதன்

பிறக்கும் போது வெற்று கையோடுதானே பிறந்தாய்?
வளர்ந்து வரும்போது ஏன் வாழ்வின் உண்மைகளை அறிய மறந்தாய்?

பணம் என்னும் வெற்று காகிதத்தை
மூட்டை மூட்டையாய் சம்பாதிக்க
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும்
முதியோர் இல்லத்தில் சேர்க்கத் துணிந்தாய்

கட்டிய மனைவியையும்
கட்டிலின் இடம் தாண்டி நினைக்கவில்லை நீ
பெற்ற பிள்ளையையும்
வளரும் பருவத்தில் பார்த்து ரசிக்க தவறினாய்

ஆண்டுகள் நகர்ந்து இன்று அவன்
தன் தந்தை முகம் காண பழைய
புகைப்படம் தேடி அலைகிறான்.

சுற்றி இருக்கும் சொந்தங்களை காணாத உனக்கு
கோடிக் கணக்கில் சொத்துக்கள் மட்டும் எதற்கு?
பாசம் தரும் இன்பத்தைவிட, நீ
தேடி சேர்த்த அந்த பாழாய்ப்போன பணம் தருமா?

ஓடி ஓடி சக்கையாய் ஆன காலத்தில்
ஓய்ந்து ஓர் இடத்தில் ஜடமாய் அமர்ந்தாய்
இன்று தேடி தேடி நீ பார்த்தாலும்
கானலாய் போன சந்தோஷம் திரும்ப வாராதே

பணத்தை சம்பாதிப்பதிலேயே குறியாய் இருக்கும் மூடனே
வாழ்வில் விலையே இல்லாத
பாசத்தின் உன்னதத்தை அறியாமலேயே மண் மூடிபோனையே !!!

எழுதியவர் : Shravanyaa (23-Aug-12, 5:38 pm)
சேர்த்தது :
பார்வை : 149

மேலே