மழை பேசுகிறேன் ...

மேக அன்னைக்கும் - வான் தந்தைக்கும்
பிறந்த தியாக குழந்தை - நான்
பெற்றதும் கை விட்டனர்... மண்ணில் ....
தள்ளாடியபடியே தரைமீது பொழிந்தேன் ....

கல்லென்றும், மலையென்றும்
மரமென்றும், மனிதனென்றும் - பாராமல்
நிற்காமல் - ஓடுகிறேன் ....

என்னில் உருவாகும் நீர்க்குமிழிகள்
சத்தமில்லாமல் உடைகிறது ...
தரையில் சில நிமிட பயணத்திற்கு பின் ...

ஆற்றிலும் , நதியிலும் , ஓடத்திலும்
கலந்தோடி கடலில் கலககிறேன்
சூரியனை விரும்புகிறேன் ..... ஏன் தெரியுமா ?
அவரென் பெற்றோரிடம் சேர்ப்பார் ...

நிரந்தரமில்லாத சொந்தமும் , பிரிந்தோடிய கண்ணீரும் , சேமித்த பணமும் , திசையில்லா பயணமும் - என்றும் வாழ்வில் நிலைப்பதில்லை ...

தேடிய கண்களில் ... கண்ணீர் மட்டுமல்ல
சொந்தம் எனை அணைத்த இந்த பூமியும்தான்
சுழலும் எனது பயணம் - மீண்டும் வருவேன் ....

(கண்ணீர்) நீர்த்துளிகளின் எனது பயணம் தொடரும் .....

எழுதியவர் : கே. அமுதா (23-Aug-12, 5:41 pm)
பார்வை : 154

மேலே