தேவதை
தேவதை
அவளை என் தோளில் தழுவிக்கொள்ளத்தான் எத்தனை ஆசை, ஆம்
பாலின் வெண்மையும் பஞ்சின் நிறையையும் கலந்து செய்த அவளது தேகம்,
என்னை அரவணைத்துக்கொள்ள தூண்டுகிறது.
அவள் கண்ணங்களை கிள்ளும்போதெல்லாம்
ரோஜாவின் இதழ்களை போல் அத்தனை மென்மை,
அவள் விடும் மூச்சுக்காற்று மல்லிகையை தழுவியதுபோல்
என்னை மூச்சு திணற வைக்கிறது,
சிரிப்பால் பௌர்ணமியும், அழுகையால் அமாவாசையையும் கொண்ட
அவளது நிலவு முகம்.
என் இமைகளை திறந்தே இருக்கசெய்கிறது,
அவள் இரு கைகளால் என் கண்ணங்களை தொடும் போது,
இரு பனிக்கட்டிகள் தொட்டதுபோல் அந்த நிமிடமே உறைந்து போகிறேன்,
அவள் உதட்டில் இருந்து உச்சரிக்கும் வார்த்தைகள்,
உலக மொழிகள் அனைத்தையும் வாய் மூட வைக்கிறது,
அவளது இரு விழிகளும் தண்ணீரில் மீன்கள் நீந்தும் அழகு,
மற்றவர்களை வலையில் விழவைக்கிறது,
பூமிபடா அவளது பாதங்களை இரு கைகளால் பற்றிக்கொள்ள,
யார்தான் விரும்ப மாட்டார்கள்,
இத்தனை அழகுகளையும் தன்னிடத்தில் இருந்தும் அமைதியாக விளையாடிக்கொண்டு இருக்கும் அவள் வேறு யாருமல்ல,
சில தினங்களுக்கு முன் பேருந்து நிறுத்தத்தில் நான் பார்த்த
பெண் குழந்தைதான் அவள்...................................(தேவதை)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------