பெண் கல்வி

ஊதுகுழலைக் கையில்
எடுக்கும் பெண்கள்
எழுதுகோலைக்
கையில் எடுக்க வேண்டும்!

ஓடு தயாரிக்கும் பெண்கள்
கையில் இனி
ஏடு மட்டுமே இருக்க வேண்டும்!

அரிவாளால் மரம்
வெட்டும் கைகளுக்கு
அறிவால் வெல்ல
வாய்ப்புக்கள் கொட்டுவோம்

குடும்பப் பாங்கான
பெண் அவளோடு
குடும்பம் பாங்காய்
இருக்க கல்விச் சீரே
முதன்மைச் சீராகக்
கேட்க வேண்டும்

சிந்திக்கும் மூளை
அவளுக்கும் உண்டு
நிந்திக்க வேண்டாம் அவள்
திறமையை

சொல்வார்கள் சொல்லட்டும்
அவள் செவ்வாய் செல்ல
வேண்டும் சீக்கிரம்
வழி மொழிவோம்
பள்ளிக்கு அனுப்புவோம்

ஐந்தறிவு கொண்ட ஆடு
மாடு மழைக்கு பயந்து
பள்ளிக் கட்டிடம் குடையாக்க

ஆறறிவு கொண்ட பெண்
அறியாமைக்கு பயந்து கல்வி
வேண்டி பள்ளிக் கட்டிடம்
குடையாக்குவது நிஜமாகட்டும்

பூமிக்கு வழி தேடி
சரஸ்வதி வந்த போது
தன் வீணை விட்டுச்
சென்றாள்

நான் மீண்டும்
வருவேன் வீணைக்காக
மட்டுமல்ல பெண்கல்வி
நூறு சதம் நிறைவு பெற்ற
நாளைக் கொண்டாட

என சொல்லிவிட்டுச் சென்று
விட்ட அவளுக்கு சீக்கிரம்
அழைப்பிதழ் அனுப்ப
முயல்வோம்!!

எழுதியவர் : pulamiambika (27-Aug-12, 5:09 pm)
Tanglish : pen kalvi
பார்வை : 54223

மேலே