பகல் வந்தது

இரவு தேய்ந்து சூரியன்
மேக திரையை விலக்கி
மெல்லன எட்டிப்பார்த்தான் !

மலர்கள் சிரித்தன
மரங்கள் மகிழ்சியுடன் அசைந்தன
காற்று பூபாளம் பாடியது
கடல் தாலாட்டியது !

கண் விழித்தேன்
ஆனாலும் இரவு தந்த
இனிமை பகலில் இல்லை !

ஆயிரம் கவலைகள்
அடுத்து அடுத்துவரும் நெருக்கடி
பகலை நமக்கு பகைவனாகிவிடும் !

ஆனாலும் பகல் நமக்கு
பாடம் கற்று தரும்
இரவு தூக்கத்திலே
தொலைந்துபோகும்

எழுதியவர் : (28-Aug-12, 7:59 am)
Tanglish : pagal vanthathu
பார்வை : 149

மேலே