மருத்துவ குறிப்பு - 1

தேவையான பொருட்கள் :-

சுக்கு
சாரனவேர்
குறுந்தட்டி வேர்
கருப்பட்டி - கால் கிலோ
நெய் - 50 கிராம்
நல்ல எண்ணெய் - 50 கிராம் .

குறிப்பு :-

சுக்கு , சாரனவேர் , குறுந்தட்டி வேர் , இவை மூன்றும் சேர்த்து திரித்து பொடி செய்து , அலசி அதில் உள்ள துரும்புகளை மறுபடியும் ஒரு முறை திரித்து பொடியாக்கி எடுத்து கொள்ளவும் . சாரண வேரும், குறுந்தட்டி வேரும் சேர்த்து 10 ருபீஸ் க்கு வாங்கினால் போதும் . மூன்றும் சேர்த்து மொத்தம் 100 கிராம் பொடி இருந்தால் போதும் . இரண்டு வேரும் பலசரக்கு கடைகளில் கூட கிடைக்கும் . மிக்ஸ்யில் திரித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை :-

வானிலியை அடுப்பில் வைத்து முதலில் கருபட்டியை பதமாக பாகு காய்த்து வடிகட்டி எடுத்து கொள்ளவும் (அதில் இருக்கும் கல் அகற்றுவதற்காக) , பின் எடுத்து வைத்த பாகை வானெலியில் ஊற்றி , சூடு வந்தவுடன் , சுக்கு , சாரனவேர் , குறுந்தட்டி வேர் இவற்றின் பொடி செய்த கலவையை கருப்பட்டி பாகுடன் போட்டு கிண்டவும் , கிண்டும் பொழுது நெய்யும் , நல்ல என்னையும் , பதமாக ஊற்றி கிண்ட வேண்டும் , பின் நீங்கள் கேசரி கிண்டுவது போல பதம் வந்தவுடன் வானிலியை இறக்கிவிடவும் . மிகவும் கட்டி ஆகாமல் , சட்டி பிடிக்காமல் இறக்கி விடவும் . ஆரிய பின் இது சில சமையம் பொடியாகவோ , இல்லை லேசாக கட்டியாகவோ இருக்கலாம் . அது நீங்கள் கிண்டுவதை பொறுத்து ..

சாப்பிடும் நேரம் : -

காலையில் எழுந்தவுடன் ஒரு தேக்கரண்டி, இரவில் ஒரு தேக்கரண்டி சாப்பிடலாம்

பயன்கள் : -

1 பெண்கள், ஆண்கள் இருவருக்கும் இருக்கும் இடுப்பு வழியை நிவர்த்தி செய்யும்

2 ஜீரண சக்தி அதிகமாகும் ..

3 கெடுதல் இல்லை. அளவாக பயன் படுத்தலாம் எப்போதும் .

எனக்கு தெரிந்ததை கூறி இருக்கிறேன் !
செய்முறை உங்களுக்கு முன்பே தெரியும் என்றால் திருத்தி கொள்ளுங்கள் இதில் தவறு இருந்தால் .

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இனி மருத்துவ மகதிர்க்காக

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (30-Aug-12, 12:32 pm)
பார்வை : 1000

மேலே