[310 ] தளம் இறங்குகின்றேன்..
உயிர்
மெய்
உயிர்மெய்
குச்சிகள் ஊன்றி
சமுதாயக் கேடென்னும்
பந்தினை க்
கவிதையின்
எல்லைக் கோட்டைத்
தாண்டவைக்கும்
துடிப்புடன்
எழுதுகோல் என்னும்
மட்டையை வீசி
அடிக்கத் ‘தளத்தில்’
மீண்டும் இறங்கியுள்ளேன்
சதமென்று நம்பி...