கப்பலில்
அடக்கமா மெதக்குது
அலைகள ஒதுக்குது
கண்ணுமுழிய பிதுக்குது
அம்மாடியோவ்
எம்மாம் பெரிய கப்பலு
சும்மாவா சொன்னாக
சொகுசான கப்பலுனு
கடலுகுல மீனு துள்ளி
குதிக்கையில நெஞ்சான்கூட்டுக்குள்ள
ஆசயொன்னு மொளைக்குது
நானுன் துள்ளையில
ஏன் ஆச மச்சா
என்ன சும்மா இருபுளனு
தலையில தட்டுனாக
அட போங்க மச்சா
கண்ணார கண்டதில
காதார கேட்டுருக்கே
இப்பதா நேருல
இந்த சொகம் கண்டுபுட்டே
இத்தன பெரிய கடலுகுல
தெனமுந்தே வந்து போறீக
ஈர காத்தோட எதமுந்தே
தெனமு தீண்ட போனீக
எத்தன நாலு
வழியனுப்பி வச்சே
இன்னைகுதே நானு
மனசார ரசிச்சே
பூ வாங்கி தந்தீக
பொடவ வாங்கி தந்தீக
கடலுகுல இப்பதே
மொதமொறையா கூட்டி வந்தீக
நானு பாத்துபுட்டே
இது போதுஞ் சாமி
நாளுபேத்துகிட்ட வெவரமா
நாஞ் சொல்லி மனசு
குளுந்துபோவே சாயுங்கால
வேளையில பொழுது
சாஞ்சு போகையில !!!!!