உண்மையன்பு
நிலையில்லா மனமும்
நித்திரையில்லா இரவுகளும்
எனைக் கடந்தபோழுதிலும்
கலங்கினதில்லையன்பே,
கலங்கினேன் என் நிலை
உணரமுடியாமல் நீ
நிலையாய் நிற்கமுடியாமல்
கலங்கிநின்ற நிமிடத்தில்.
உனக்கொன்றை உரைக்கிறேன்
நீயும் நானும் எங்கே
பிரிந்துநிற்கிறோம் ஆனாலும்
உண்மையன்பின் வெளிப்பாடுதானே இது.