பசுவந்தனை அருள்மிகு கைலாசநாத சுவாமி சமேத ஆனந்தவல்லி ஸ்துதி
நன்றும் தீதும் கலந்திருக் குமிந்த
நானிலத்தே
இன்று நீ எனக்கோர் வரமரு
லானந்த வள்ளியு மையே
பாலில் நீரைப் பகுத்துண்ணும்
அன்னம் போல்-வாழ்
நாளி லெனக்கு நன்று தீது
பகுத்து வாழ அருள் தருவாய்...
கருமவினை பலகோடி காத்திருக்கும்
இப் புவியினிலே -நின்
அருமை கண்டு வாழுமிந்த
அடியேனைக் கரை சேர்ப்பாய்
பொறுமை கொண்டு ஆசைகளை
புறம் தள்ளி வாழாமல்-வீண்
பெருமை கொண்டு என் வாழ்வைத்
தேடித் தேடித் துலைதிட்டேன்
ஆனந்த வல்லி உமையே அண்ட சராசரங்களை
அடக்கி யாளும் தாயே -எனக்கு
ஏனிந்தப் பிறவி என்று என்னாத நாளில்லை..
தொக்கி நிற்கும் பல நூறு கோடிஅண்டத்தில்
சிக்கித் தவிக்கும் சிற்றின்ப வாழ்க்கை
வேண்டாமெனக்கு
பழவினை தவிர்த்துன் பொற்பாதக்
கமலத்தில் நான் சரண் புகவே
நிலவினை சேராமல் -நீ
என்னைக் காத்திடுவாய்..
வருவினை நானறியேன்-இவ்
வையத்துள் வாழும் வகையறியேன்-இனி
கருவினை வாய்க்காமல் காத்தருள் பசுவை-வாழ் கைலாசநாத சமேத ஆனந்த வல்லி உமையே..
---பசுவைஉமா

