காதலியை புகழாதே
பெண்களின் அழகை
வர்ணிக்காதே !
அது பெண்களை
வீழ்த்த
ஆண்களின்
அல்ப ஆயுதம் !
கூவி விற்கும்
கடைசரக்கு
வியாபார தந்திரம் !
ஆண்களை
அதிகம் பெண்கள்
புகழ்வதில்லை !
அது தேவையில்லை
அடிபணிவான் ஆண்மகன்
என அவளுக்கு வரும் தைரியம் !
ஆண்மகனே ! நீ மட்டும்
ஆயிரம் ஆண்டுகளாய்
பெண் அழகை ஏன்
புகழவேண்டும் ?
காதல்வந்தால் கட்டிகொள்
அவள்
கடைக்கண் பார்வையில்
கண்டுகொள் !
அதைவிட்டு
பெண்ணை நீ புகழ வேண்டாம் !
இல்லாத அழகை இருப்பதாக
புளுகவேண்டாம் !