பரவசம்

வானம்பாடிகள் பறந்து செல்ல பார்க்க பரவசம்
கானம்பாடி கைதாளமிட்டு பஜனை சொல்ல பரவசம்
வாய்க்கால்நீர் வயலுக்கு பாய்ந்துசெல்ல பரவசம்
தாய்பசு கண்டு கன்று துள்ளுவது ஒருவகை பரவசம்.

பச்சை நாற்று தென்றலில் ஆட பரவசம்
பிச்சை பாத்திரத்தில் விழும் நாணயம் பரவசம்
எச்சில் இலை சோறு இல்லாதவனுக்கு பரவசம்
இச்சை கொண்டு இருவர்கொள்ளும் காமம் பரவசம்.

மழைக்காலத்து மயில் விரிக்கும் தோகை பரவசம்
தத்தை குயில் பாடும் பாட்டு கேட்க பரவசம்
நத்தை பாறையில் நகர்ந்து செல்ல பரவசம்
முத்தை ஆழக் கடல் சிப்பியில் எடுக்க பரவசம்.

அழகான பூக்கள் சிரிக்கின்ற அழகு பரவசம்
பழகாத ஊரில் கிடைக்கின்ற நட்பு பரவசம்
அருவிமேநீராடி அன்னம் தின்ன பரவசம்
உறுமிகொட்ட ஊர்கோயில் திருவிழா பரவசம்.

வசந்தகாலத்தில் வருகின்ற மழை பரவசம்
வயசு காளையருக்கு பூவையர் புன்சிரிப்பு பரவசம்
மாமரம் பூமரம் ஆகும் தோற்றம் பரவசம்
மாமல்லபுரத்து சிற்பங்கள் காண பரவசம்

பாட்டும் பரவசம்
கூத்தும் பரவசம்

வேட்டும் பரவசம்
வித்தை பரவசம்

நாட்டோரே கேளுங்கள்

நம்பைந்தமிழ் ஒன்றே
பரவசமோ பரவசம்.


சுசீந்திரன்
.

எழுதியவர் : சுசீந்திரன் (4-Sep-12, 12:54 pm)
பார்வை : 133

மேலே