குழந்தையாய் ......

அம்மாவின் சேலை பிடித்து நடந்த நாட்கள்
அப்பாவின் ஐந்து காசுக்காக ஏங்கிய நாட்கள்
தாத்தாவின் தோல் ஏறி சென்ற நாட்கள்
பாட்டியின் பின்னால் மறைந்து இருந்த நாட்கள்
தங்கையை அடித்து விளையாடிய நாட்கள்
தம்பியை தள்ளி விட்டு ஓடிய நாட்கள்
அண்ணனின் பாசம் ; அக்காவின் அரவணைப்பு
இவ்வாறெல்லாம்
எத்தனை நாள் கனவு காண்பது
காப்பகத்தில் இருந்து கொண்டு ?

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (4-Sep-12, 6:52 pm)
சேர்த்தது : விசா
Tanglish : kulanthaiyaai
பார்வை : 161

மேலே