வானம் வசப்படும்

ஓவியனின் கற்பனை
காட்சியாய் மாறி ...
காட்சிகள் உயிர்பெற்றால் -- வானம் வசப்படும்
சிற்பியின் சிந்தனை
சிலையாய் வடித்து ...
வடித்த சிலை உயிர் பெற்றால் --வானம் வசப்படும்
கற்பனையை கவிதையாக்கி
கனவுகளை நிசமாக்கினால் ...
கவிங்கர்களுக்கும் --வானம் வசப்படும்
தன் அறிவை தானே செதுக்கி
அதிலே புத்தறிவை பெற்று
கற்றவர்களை உருவாக்கும்
கருணைப் பணியில்...
தன்னை ஈடுபடுத்தி
என் போன்ற மாணவனைக்கூட
ஒலிம்பியா விண்கலத்தில்
வானுக்கு அனுப்பும்
என் ஆசிரியருக்கும் -- வானம் வசப்படும்
கற்ற அறிவோடு புத்தக அறிவில்
புதிய முதலீடு செய்து
புதிய இந்தியாவை உருவாக்கும் போது...
என் போன்ற மாணவனுக்கும் --வானம் வசப்படும்
முடியும் என்ற முதுமொழியும்
முயற்சி என்ற பழமொழியும்
கூட்டணி அமைத்து
சாதனை என்ற புதுமொழி
படைத்தால் ---வானம் நம் வசப்படும்.