தூய நின் சேவடி போற்றுதும்...

தமிழம்மாவுக்காய்....
அன்று நான்
தபால் பெட்டி டவுசரொடும்
எண்ணையிலா தலையொடும்
சளி வடிந்த மூக்கோடும்
வயிறொட்டிய பசியொடும்
முன் நின்ற போது
அருகே தலை வாரி
நெற்றியில் நீ
தந்த ஒற்றை முத்தம் ...
என் உலகில்
நம்பிக்கையின் முதல்
விதையல்லவா!
அகரம் சொன்ன
சிகரம் நீ
ஏற்றினாய் எங்களை
ஏணியாய்...
நீயும் ஏறாமல்...
குழவியாய் நின் மடியில்
குதூகலித்த நான்...
இன்று நெக்குறுகி
விழி பிதுங்கி
உன் மடி புரள
தவிக்கிறேன்..
வாழ்வில் ஜெயித்தாலும்
இன்று வரை
உன்னை மடி தேடும்
சிறு பிள்ளையாய்
தினம் தினம்...
தூய நின் சேவடி
போற்றுதும்....
(இன்று ஆசிரியர் தினம் ...வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை ..வணங்கி நிற்கிறேன்..என் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து வணங்கிட ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்...என் வாழ்வில் ஏணியாய் இருந்த நல் ஆசிரியர்கள்..இவர்கள்..என்னை செதுக்கிய சிற்பிகள்...அரசினர் துவக்க பள்ளி.செங்கோட்டை..எஸ்.ஆர்.எம் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி செங்கோட்டை(திரு.பிச்சம்மாள்,திரு.முருகையா,திரு அம்பி,திரு செய்யது,திரு பத்மனாபன்,திருகங்காதரன்,திரு பொன்னம்மாள்,திரு மல்லிகா,திருகுருவம்மாள்,திரு.பாப்பா,திரு ல்லிதா சிவராமன்,திரு சேகரி,திரு மனொரஞிதம்,திரு கல்யாணி,திரு பிரேமா....)க்ளாசிக் டியூசன் திருசுரேஷ்குமார்,ஈசி கம்பியூட்டர் திரு திரவியம்.சன் பள்ளி திரு மகேஸ்வரி,...மதுரை மருத்துவ கல்லூரி..(PROFESSORS…THIRU RANGASWAMY,THIRU AARUMUKAM,THIRU ARUMUKAM,THIRU THAARABAI,THIRU ARUNA(PATHOLOGY)THIRU ARUN,THIRU RAMANATHAN(PHYSIOLOGY)…….MORE PROFESSORS),,,,,எழுத்து.காம் ல் என் தமிழம்மாவாய் நான் பார்த்த பொள்ளாச்சி அபி அய்யா,சங்கரன் அய்யா(கவின்),என் நண்பர் கவிஞர் மகுடெசுவரன்,மருத்துவர் விகே.கன்னியப்பன அய்யா,நண்பர் ஹரிஹரன்நாராயணன்,காளியப்பன் எசக்கியல் அய்யா,இன்ஸ்பெக்டர்:அகன் அய்யா(அகன் அய்யா ..செல்லமாக மகள் சொல்லும் அடை மொழி இது ..கோபம் வேண்டாம்)முருக பூபதி அய்யா.தோழி லலிதா,தோழி ப்ரியாராம்,ரெளத்திரன் சிவா,நண்பர் கணெஷ்குமார் பாலு....இன்னமும் வாழ்வியல் பாடங்கள் சொல்லி தரும் என் அன்பு நண்பர்களும் ஆசிரியர்களே அனைவருக்கும் நன்றி... தூய நின் சேவடி
போற்றுதும்....)