கரியாகட்டும் .............

வாழ்கை கரியானதால் தான்
இந்த கரிக்கு நடுவில் வேலைக்கு வந்தோம் !
இப்போது வாழ்க்கையோடு நாங்களே கரியாகி போனோமே !
நாங்கள் வடித்த கண்ணீர்கள் எங்கள் வாழ்க்கை தீயையும் அணைக்கவில்லை
எங்கள் உடலின் தீயையும் அணைக்கவில்லை !
தினம் ஒருவர் மரித்தாலும்
கஷ்டம் எங்களை கந்தகம் நோக்கித்தான் அனுப்பியது !
உறவுகளை வாழவைக்க
அன்று நாங்கள் உரிமை இழந்தோம்
இன்று உயிரை இழந்தோம் !
எங்கள் உயிரை எரித்த தீ உங்கள் உணர்வுகளை எழுப்பாதா ?
எம்மோடு கரியாகட்டும் இந்த கொடியவாழ்வு !

எழுதியவர் : வில்லைம்ஸ் ( விசா ) (5-Sep-12, 10:35 pm)
சேர்த்தது : விசா
பார்வை : 129

மேலே