கடவுள்-எதிரி

கடவுளே,
நீ என் முதல் எதிரி.
கடந்துநிற்கும்
நீயோ,
மதிப்பிழந்து என்னிடத்தில்
மிதிப்பாக ஆகிப்போனாய் - இன்று
எதிரியாயும்
மாறிவிட்டாய்.

தீர்க்கப்படா பிரச்சினைகள்,
விடையில்லா வினாக்கள்,
விரக்தியுற்ற சிந்தனைகள்,
விடியலற்ற இருட்டுகள்,
எனக்கிட்ட வேதனையால்
உனக்கான தொழுகைகளை
உதவாதென உடைத்தெறிந்து
நாத்திக நாற்காலியில்
நானுந்தான் தொற்றிக்கொண்டேன்.

வேளைக்குதவும்
வேற்றுமனிதன்
ஆபத்தில் கூடவரும்
உற்ற நண்பன்.
வட்டமிடும் புள்ளுக்கு
ஈட்டமிடும்
இணைந்த கைகள்,
எனக்கு நண்பர்களாய்.
இல்லை இல்லை,
கடவுளாய்.

கடவுளென உரைப்பதிலும்
களங்கங்கள் வந்து சேரும்
கல்லாக நீயிருந்து
கனியாது நிற்பதனால்.

கடவுளென நான் உரைத்து
காணாது வைப்பதுவோ?
நல்லுள்ளம் படைத்திட்ட
நன்றியுள்ள நண்பர்களை.

கடவுளெனும் பெயருந்தான்
நண்பருக்காகாது,
கற்களுக்கு வேண்டுமென்றால்
தாராளமாய் தானமிடு.

எழுதியவர் : S.Raguvaran (6-Sep-12, 12:14 am)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 140

மேலே