[319 ] கலை தந்த அலை .. ..!

[திரு கே.எஸ்.கலையின்
நண்பர்களின் நலனுக்காக
என்ற ஜென் தத்துவம் பற்றிய
பதிவைப் படித்த பொழுது
மனம் சொன்னது:]

இன்றைய பகல்
எழுதியவற்றை அழித்தது
இரவு வந்தது..
-0-
இரவினிலும்
நடக்கிறது
எறும்புக் கூட்டம்..
இயற்கைக்கு
ஓய்வில்லை
என்று சொல்லும்..
-0-
பச்சையாய்த்
தின்கிறது பூச்சி!
படைப்பையே
படைப்பழிக்கும் சாட்சி!
-0-
பாறையில்
வழிந்தோடும் நீர்
பலர் தலை மீது விழுந்து
உடலெல்லாம் தடவிடினும்
உள்ளத்தை நனைப்பதிலையே!
-0-
ஓடுகின்ற நீரின்முன்
உறைந்துவிட்டேன்..
ஆடினாலும்
என் நிழல் ஓடவில்லை..
-0-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (6-Sep-12, 6:29 am)
பார்வை : 194

மேலே