என் வயதை தின்னும் வாரங்கள்
திருடு போன ஞாயிறு
வறண்டு போன திங்கள்
இருளாய் செய்வாய்
இதில் புதன் வேறு இம்சையாய்
விடை தெரியா வியாழன்
என் நிலை தெரியா வெள்ளி
சனி மட்டும் நம்பிக்கை தருகிறது
அடுத்த வாரம் வேலை கிடசுரும்னு
வாரங்கள் என்
வயதை தின்னாலும்
மாதங்கள் குறைந்து
என் வயது அதிகரிக்க
விடை தேடும் கேள்வியாய்
விடியல் தோறும் பனி துளியாய்
தினம் கரைந்து போகிறேன்...