மூளி.

அவள் அழகி-

சிற்பி செதுக்கையில்
கையுளி உடைந்தது.
முழுமைபெறாமல்
போனாள் அழகி.

``முடியாத அழகி’’ மருவி
மூளி.
எதிர் சொல் மூளன்.

விலைஉயர்ந்த வேசிக்கு
சீதை வேடம்- மூளி.
கற்பளிப்பு செய்பவன்
கதாநாயகன்- மூளன்

மூளிகள் மூளன்கள்
நடக்கும் உலகம்.
நீ- முழி.


சுசீந்திரன்.

எழுதியவர் : சுசீந்திரன். (8-Sep-12, 8:50 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 127

மேலே