நீதி மன்றம் !
வெளியேப் போக
மனமில்லாமல் படிந்திருந்தது
உண்மை நீதிமன்ற ஜன்னலில் ...
தீர்ப்புகள்
ரெக்கைக் கட்டி பறந்தது
ரொக்களால் ...
கவனித்துப் பார்த்தேன்
சிலந்தி வலையில் உள்ள
ஓட்டையை விட
சட்டத்தின் ஓட்டை பெரியதாக
இருந்தது ...
வழக்கறிஞர்கள்
சாய்ந்தார்கள் லஞ்சத்துக்காக
உண்மையை ஊனமாக்கும் பணியில் ...