எங்கே ஓடுகிறாய்
ஏய் மனிதா
எங்கே ஓடுகிறாய்
எதை நோக்கி
உன் இலக்கு என்ன
பணமா
பதவியா
புகழா
எதற்காக
ஏன்
யார் நிர்ணயதார்கள்
எது இங்கு
அடிப்படை
மனிதா
பதில் தெரியுமா
உன் பயணத்தின்
காரணம் தெரியுமா
தெரிந்து கொள்ள
நினைத்ததுண்டா
அதற்கு உனக்கு
நேரமுண்டா
எத்தனை
நொடிகள்
உன்னால் ஒதுக்க முடியும்
அதற்கு உன்னால்
திட்டமிடமுடியுமா
உன் ஓட்டத்தின்
காரணம் புரிந்து கொள் மனிதா
அப்பொழுதுதான்
உன் இலக்கை உன்னால்
எளிதில் அடைய முடியும்
காரணம் இல்லா
காரியம் வீரியம் இருக்காது
வீரியம் இல்லா வேகத்தில்
விவேகம் இருக்காது
விவேகத்தோடு ஓடு மனிதா
உன் வாழ்கையில்
விண்ணை தொடும்
வழி தானாய் தெரியும்
விழித்திரு
உயிர்த்திரு
தனித்திரு
வெற்றி பெறுவாய்