மனிதம்

20----- மனிதம் எங்கே போனது
அம்மாவிடம் கேட்டேன்
கூகுள் செய் என்றால்
தேடி பார்த்தேன்
விளக்கம் இல்லை
பள்ளியில் கேட்டேன்
ஆசிரியருக்கும்
புரியவில்லை
எங்கே இருந்து
இதை கற்றாய்
என கேள்வி எழுப்பினர்
நேரத்தை வீணாக்காதே
வேலையை பார் என்றார்கள்
விடா முயற்சியில்
விளக்கம் கிடைத்தது
விளங்கவில்லை
காரணம் அது ஓர்
உணர்வு
உணர்வுகளை உணரத்தான் முடியும்
உணர்த்த நான்
யாரை தேடுவது
கணணியோடும்
மனித யந்திரதொடும்
உறவாடும்
மனிதா
எப்படி
உன் ஓட்டப்பந்தயத்தில்
தொலைந்துபோன
மனிதத்தை
தேட முடியும்
மனிதனா
யந்திரமா
எனும் போட்டியில்
ஓடும் ஓட்டத்தில்
உன்னை மறந்து
ஓடுகிறாய்
எங்கே தேடுவாய்
எப்பொழுதோ
எங்கோ
எவரோ
தொலைத்த மனிதத்தை
யந்திரத்தோடு
யந்திரமாய்
கலந்த
நாம்
எங்கே
உணர்வது

எழுதியவர் : வெற்றி செல்வி (9-Sep-12, 9:43 am)
சேர்த்தது : vettiri selvi
Tanglish : manitham
பார்வை : 146

மேலே