சுயநலம் .....
"நான், எனது, என்னுடைய "
இம் முன்று வார்த்தைகள் தான்
இன்றைய பிரணவ மந்திரம்!!!
கல்வி கூடங்களில்
சுமுகமான "சுயநலம்"
உறவுகளில்
நலம் விசாரிப்பதில் கூட "சுயநலம்"
பாக பிரிவனையில்
ஆணித்தரமான "சுயநலம்"
அரசியலில்
அபாரமான "சுயநலம்"
ஆன்மீகத்தில்
அமைதியான "சுயநலம்"
மருத்துவத்துறையில்
மனசாட்சியற்ற "சுயநலம்"
பொது மக்களிடம்
பொறுமையற்ற "சுயநலம்"
எங்கும் "சுயநலம்"
எதிலும் "சுயநலம்"
என்ற சுகாதாரமற்ற சூழலில்
எத்தனை படிகள் ஏறி
ஏற்றங்கள் பெற்றாலும்
"சுயநலத்தால்"
சுய நலம் சிதைந்து கொண்டு இருகின்றதே..
உணர்ந்து செயல் படுவோமா????