முன்னேறும் பிச்சைகாரர்கள்.....

கால்கள் ஊனமானதால்
மன ஊனத்தை தவிர்க்க

பிச்சை தொழிலில் அடி எடுத்து வைத்தேன் ....
சுக்கிர தசையோ என்னவோ ??
சுலபமாய் பணம் ஈட்டினேன் ...

ஒரே மாதத்தில்
பத்து பேரை தொழிலில் இறக்கினேன் ...

பத்து பேரும் கிளை விட்டு படர்ந்தார்கள்.....

இப்போது ....

கால் இல்லா விட்டாலும்
கால் மேல் கால் போட்டு
அமர்ந்த இடத்தில என்னிடம் "பணம்"

தொழில் நுணுக்கத்தால்
நான் இன்று ஒரு சங்க தலைவன்..

உறுப்பினர்களுக்கு
இலவச பயிற்சி ...
இலவச உணவு ...

முன்னேறும் பாதையில் நங்கள் இன்று ....
எங்களை
முடக்காமல் நீங்கள் கொடுத்த ஆதரவால் ......

எழுதியவர் : கிருபகணேஷ், nanganallur (9-Sep-12, 11:01 am)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 201

மேலே