சுமை !

தலைசிறந்த ஆப்பிள்கள்
கண்ணை பறிக்கும் வண்ணத்தில் ஆரஞ்சுகள்
குழந்தைக்கு சாப்பிட ஹார்லிக்ஸ்
அம்மாவுக்கு முகம் பூச க்ரீம்
அய்யாவுக்கு குடிக்க பெப்சி
வீட்டு நாய்க்கு பிஸ்கட்
மீனுக்கு தீனி ......

முதலாளியின் வீட்டுக்கு வாங்கிய பொருட்சுமையோடு
தன் சுமையையும் தூக்கிக்கொண்டு செல்கிறாள்
அந்த சிறுமி !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (9-Sep-12, 9:12 pm)
சேர்த்தது : விசா
பார்வை : 122

மேலே