இனம் ஒன்று அழிகிறது!

இனம் ஒன்று அழிகின்றது இனியாவது பாருங்கள்.
மனம் கொண்ட மனிதர்களெ
இனம் ஒன்று அழிகின்றது இனியாவரு பாருங்கள்.

தமிழர்க்கு நாடு தரணியில் இல்லை
இத்தருணம் கைகொடுங்கள்.

தயவுடனே தாள்பணிந்து மண்டியிட்டு கெஞ்சுகின்றோம்.
மா மனிதர்களே தமிழ் இனம் ஒன்று அழிகின்றது
இனியாவது பாருங்கள்.

உங்கள் வினாவிற்கான விடை
ஆசியாக்கண்டத்தில் அந்தரங்கில் ஆடுகின்றது
எமாதர்மர்களின் விருப்புக்குரிய இடமே ஸ்ரீலங்காவாம்
சிங்களச் சேனையால் சாக்களமாகுது தமிழர்குலம்
ஏக்காளம் இட்டு ஏம்பலித்தாடுது சிங்களம்
இனம்ஒன்று அழிகிறது இனியாவது பாருங்கள்.

தமிழ்பகை முடிக்க வேல் எடுத்த முருகா.
தமிழர் நாம் வாழ்விழந்து கிடக்கின்றோம்.
வாள் எடுத்து போர் புரிந்து
நல்ல தமிழர்க்கு வாழ் வளித்திடு.
சீறிவரும் சிங்களத்தின் சீற்றம் அடக்கிடு
மயிலேறி விளையாடி தமிழர் ஊர் மீட்டிடு
செங்குந்தர் கோட்டத்தில் உதித்த செங்கரும்பே
செட்டிகுள தமிழர் வாழ்வினிக்க வழிஒன்று காட்டிடு
பால்குடிக்கும் பச்சிளங்கள் நோய்பிடித்து கிடக்கின்றார்கள்
வாய்அடைத்து நிக்காதீர்கள்
வந்து பாருங்கள் இனம் ஒன்று அழிகிறது
இனியாவது பாருங்கள்.

செந்தமிழை வளர்த்த நம்தமிழர் சோர்ந்து போவதா.
வந்தேறு குடிகள் சிங்களம் என வாயெடுத்துரைத்திடுவோம்
இனம் என்று அழிகிறது இனியாவது பாருங்கள்.

(செ. அந்தணன்)

எழுதியவர் : (9-Sep-12, 9:15 pm)
பார்வை : 181

மேலே