ஒளியை நோக்கி -----அருணும் நானும் ---கவின் சாரலன்

இத் தருணத்திற்கு ஏற்ற சிறப்பான
பதிவு அருண் . அறிவியலாளர் முந்தைய குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் பாதுகாப்பானது என்று சான்றிதழ் வழங்கிய பாரதத்திற்கு குறிப்பாக தமிழகத்திற்கும் ஒளி தரும்
எதிர்கால வளம் தரும் இருட்டாச்சிக்கு
விடை தரும் அறிவியல் பூர்வமான
அணு உலையின் நிர்மாணம் எவ்வளவு
இன்றியமையாதது என்பதை
எல்லோரும் அறிவுபூர்வமாக எண்ணிப்
பார்க்க வேண்டும் அணு உலைகள்
அமைக்கப் படும்போது கதிரியக்கத்தின்
அளவு சுற்றுப் புற சூழலுக்கு அங்கு
வாழும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்பவற்றை கருத்தில் கொண்டு பாதுகாபுடனே அமைக்கப் படுகிறது

அண்மையில் சுனாமியால் மிகவும்
பெரிய ஆபத்துக்கு உள்ளானது
ஜப்பானிய அணு உலை. அதற்காக
ஜப்பானியர்கள் அணு உலையை
மூடிவிடவில்லை அதை சரி செய்தார்கள் மீண்டும் துவக்கி செயல் பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்
அணுவின் பாதிப்பினால் ஏற்பட்ட
அபாயத்தையும் சோகத்தையும்
ஜப்பானியர்களை விட வேறு எந்த
நாட்டு மனிதனும் அறிந்திருக்க
நியாயம் இல்லை ஹிரோஷிமாவும்
நாகசாக்கியும் சரித்திர சாட்சி

ஜப்பான்
நாலு தீவுகளான
நந்த வனம்
உலகிற்கே வழி காட்டும்
மனித இனம்


நாலு தீவுகள் கொண்டு
இறைவன் எழுதிய
ஹைக்கூ
உழைப்பே உயர்வு
என்பது அவர்கள்
உலகிற்கு தந்த
தத்துவம்

உதிக்கும் சூரியனுடன்
எழும் நாடு
ஒளி பெற்று என்றும்
வாழும் தேசம்

இருளிலிருந்து ஒளியை நோக்கி என்பதுதான்
மறை சொல்லும் வழி
----நாம் ஜப்பானியரை பின் பற்றுவோம்

------ கவின் சாரலன்

கவிக்குறிப்பு : "கூடங்குளம் ஆபத்து அல்ல "
என்று அருண் வரைந்த கவிதையில் உதித்த
கருத்தும் கவிதையும் இங்கே உங்களுக்காக.

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-12, 10:07 am)
பார்வை : 385

மேலே