பிளாஸ்டிக் கழிவுகள்
வீசாதீர்கள்
பிளாஸ்டிக்
கழிவுகள் !
அது
இயற்கை
அழிவுகள் !
கடலில்
பிளாஸ்டிக்
வீசினால்
சாகிறது
மீன்கள் !
காடுகளில்
வீசினால்
சாகிறது
மரங்கள் !
பிளாஸ்டிக்கை
உண்ணுவதால்
சாகிறது
விலங்குகள் !
மண்
பிளாஸ்டிக்கை
உண்ண முடியாததால்
சாகிறது
மண் புழுக்கள் !
ஒவ்வொரு
பிளாஸ்டிக் கழிவுகளிலும்
கழிகிறது
ஒவ்வொரு
உயிர்கள் !