%%%%% ரத்தினங்கள் %%%%%
கூடு
இந்த வெற்றுடம்பு
வெறும் கூடு%%%
கேடு
பொல்லாத ஆசைகளினால்
வருவது கேடு%%%
தேடு
உனக்குள்ளே ஒளிந்திருக்கும்
உன்னைத் தேடு%%%
ஓடு
சாதிக்க வேண்டும்
நிற்காது ஓடு%%%
ஈடு
ஞானத்திற்கு
ஏது ஈடு%%%
ஏடு
அனுபவமே
கையோடு வரும் ஏடு%%%
போடு
உன் வெற்றிக்கு
விதை போடு%%%
வீடு
இறைவனது உள்ளமே
நிலையான வீடு%%%
நாடு
உன்னை ஏற்றும்
வழிகளை நாடு%%%