அவர்கள் வெறும் நண்பர்கள்தான் ...

பொய்யை கூட மெய் என்கும்
காதல்!
பொய் சொன்னதையும் சொல்லி
தலை வணங்கும் நட்பு !
இதயத்தில் வழியும் ரத்தம் அறியாது
காதல்!
இதயம் முனுமுனுக்கும் ஓசை கூட அறியும்
நட்பு !
மனம் பார்த்து வரும் காதல் ..
இனம் பார்த்து பிரியும் ..
மனதோடு தோன்றும் நட்பு
இனம் ,மொழி பார்பதில்லை !
கையில் பணம் இருந்தால் மட்டுமே ..
உறவுகள் !
கையேந்தும் காலத்திலும் ஓடி வந்து
கை கொடுக்கும் நட்பு !
ஆதலால் இனியும் சொல்லாதிர்கள்
அவர்கள் வெறும் நண்பர்கள்தான் என்று ...

எழுதியவர் : மல்லி (17-Sep-12, 2:46 pm)
பார்வை : 353

மேலே