சிலேடைகள் - கே.எஸ்.கலை

நண்பனின்
மரண வீட்டில்
விம்மி விம்மி
அழுதுக் கொண்டிருக்கிறான்
உயிர்த் தோழன்-
“கொடுத்தக் கடன்” பத்தாயிரம் !

நடிகனின்
மரண வீட்டில்
கைக்குட்டை நனைய
சக நடிகனின் இரங்கல் உரை-
“நல்ல நடிகன்” - யாரோ சொல்வது
காதில் கேட்டது !

எழுதியவர் : கே.எஸ்.கலை (18-Sep-12, 7:58 pm)
பார்வை : 238

மேலே