இந்த "காதல்" வந்துவிட்டால்....

காதல்```````
உலகில் அன்பு நிலைபெற,
இறைவன் எழுதிட்ட எழுத்து!

இந்த காதல் வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.

இந்த காதல் வந்துவிட்டால்....
கற்பனை விரியும்..
உலக காதலர்கள் பட்டியலின்
இந்திய வரிசை.,.,
நம்மிருவர் பெயரோடு..
சேர்ந்தே நீளும்.,!!.,

இந்த காதல் வந்துவிட்டால்....
நடு ராத்திரி சொப்பனம்.!
தூக்கத்தில் நீ பேசும் பேச்சை,
கேட்டு சொல்வான் நண்பன்.
மறுநாள் காலை வணக்கமாய் .!!

இந்த காதல் வந்துவிட்டால்....
என்னுள் வந்துவிட்டாய் - நீ !
என்று குளிக்கும் போதும்
நுரைத்து சிரிப்பாய்!!

இந்த காதல் வந்துவிட்டால்....
தலையணை இடம் மாறும்.
கட்டி அணைத்து முத்தம் பொழிவாய்.,.,.
தனிமை வேண்டி போர்த்தியும் கொள்வாய் ....!

இந்த காதல் வந்துவிட்டால்....
கண் மூடிட்டால் உறங்கிடுவேன் என்று .,.,.
விழித்துக்கொண்டே
நினைத்திடுவாய் அவளை!!!

இந்த காதல் வந்துவிட்டால்....
இரவு பகலாகும்,.,.
பசி மறந்து போகும்,.,
தூக்கம் விடிந்து நீளும்,.,.
உலக நிகழ்வுகள் யாவும்
அது போக்கில் நடக்க,,.,.
நீ மட்டும் - தனித்து நடப்பாய்
உன்னவளை சுமந்தபடியே!!

இந்த காதல் வந்துவிட்டால்....
பேதை போலே
செயல்கள் மாறும்.!
பூக்கள் கண்டால்
புன்னகை விரியும்.!
தனிமை.. தனிமை..
என்று உலகம் சுருங்கும்!!!

எழுதியவர் : கணேசா (19-Sep-12, 7:28 pm)
சேர்த்தது : GANESANARASIMMAN
பார்வை : 181

மேலே