நிழலின் மீது வெயிலின் முத்தம்...!(மதி)

வேராக அவனிருக்க
விருட்சமாக நானிருக்க!

கிளைகளாக மற்றவரிருக்க
தளிர்களாக மழலைகளிருக்க!

கனிகளாக பாவபுண்ணியமிருக்க
மலர்களாக மகிழ்ச்சியிருக்க!

வெயிலின் முத்தத்தால் நான் தனித்துப்போக
மீண்டும் என்னை அவன் விருட்சமாக்க!

நான் அவனாக வேண்டும்!

கிளைகளை கீழிறக்கினேன்!
தளிர்களை தானமாக்கினேன்!
கனிகளை புசித்தேன்!
மலர்களை வேருக்கு காணிக்கையாக்கினேன்!
இப்போது நான் அவனாகிப் போனேன்!

வெயிலின் முத்தம் இருந்தால் மட்டுமே
நிழல் சாத்தியம்!

இல்லற வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்தால் மட்டுமே
முக்தி சாத்தியம்...!
===============================================

இதில் வெயில் என்பது இல்லற பந்தம்,
அவன் என்பவன் சிவன்,

===============================================

குறிப்பு,

மதிக்கு ஒரு தலைப்பு தருகிறேன் ஒரு கவிதை தாருங்கள் என்றார் ஹரிஹரன் அவர்கள்,

ஒரே தலைப்பில் இருவரும் எழுதலாம் என்று முடிவு செய்தோம், அவர் தந்த தலைப்பு இது,

ஏட்டிக்கு போட்டியாக ஒரு தலைப்பைக் கொடுத்து எழுதுங்கள் தோழி என்றால் எழுதித்தானே ஆகவேண்டும் எழுதிவிட்டேன்,

===============================================

எழுதியவர் : நா.வளர்மதி. (19-Sep-12, 8:28 pm)
பார்வை : 295

சிறந்த கவிதைகள்

மேலே