ஒருநாள் ஒரு கனவு
![](https://eluthu.com/images/loading.gif)
ஒருநாள்
நான் மீண்டும் பிறந்தேன்
நவீன வசதிகள் கொண்ட
மருத்துவமனையில் சுகப்பிரசவமாய்...!
மகிழ்ச்சியில் என் தந்தை நீட்டிய
சலவை நோட்டை எந்த
செவிலியரும் வாங்கவில்லை....!
கல்விக்கு காலடி எடுத்து வைத்தபோது
சாதிச்சான்றிதழ் என்னிடம் கேட்கப்படவில்லை
இருப்பிடச்சான்றிதழ் வாங்க
பத்து நயாபைசா கூட செலவாகவில்லை....!
கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும்
இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லை ....!
எனக்கான கல்வி முழுவதும் இலவசம்
என் திறமைக்கான வேலையும்
என் வசம் ....!
நாட்டில் ஏனையவை
அரசுடைமையாகவே இருந்தன
அரசியல்வாதிகளின்
உடைமைகளாக இல்லை ....!
ஊழல் என்று யாரோ கூறக்கேட்டு
அகராதி திறந்தேன்
அகராதியில் கூட அந்த வார்த்தை இல்லை ....!
இன்று சுதந்திரதினம் என்ற
சத்தம் கேட்டு எழுந்தேன் ......!
ஒரு கனவு .....!