கல்லறையோன்று கதறுகிறது ....!!

பாவையரின்
பாதச்சுவடுகளையே - இங்கே
காணவில்லையே...
ஓ.. காளையர்களே
காதலில் தோற்றுப்போவது
நீங்கள் மட்டும்தானா...?
கன்னியரின் கல்லாகிப்போன
இதயத்தில்
கனிவை நீங்கள் எதிர்பார்த்து
கனன்றது போதும்.
புதிது புதிதாய்
புதுப்பிறப்பெடுக்கும் காதல்களோடே -அவர்கள்
கனிந்து திரிகையில்
நீங்கள் மட்டும்
தூக்கத்தை விவாகரத்து செய்துவிட்டு
துயரங்களோடே புணர்ந்து திரிகிறீர்கள்..
தடையுத்தரவு போடுங்கள்
இரவுக்கு
இரக்கமில்லா அவள்முகத்தின்
பிம்பங்களை
காட்டிக்காட்டி கனவுக்கு
அவை உணவுகொடுப்ப்பதால்...
நீளுகின்ற
அவளின் நினைவை நிறுத்தி சொல்லுங்கள்
நிலையில்லா நேசங்களோடே -நீ
நீண்ட தூரம் செல்ல முடியாதென்று...