தங்கை ..!

அப்பாவின் தோள்கள்
தலையணை ஆனது-
தங்கை என் உயிருக்கு
குழந்தை என்னும் நிலவாய்
அவள் இருந்த போது !

அவளின் புன்னகைகள்
நித்தமும் ரசனைகலாகின எனக்கு !
சின்ன உதட்டினால் சிட்டுகுருவியாய்
அண்ணா .. என்றழைத்த நாட்களில்
நானும் தாயானேன் அவளுக்கு ..!

பள்ளிக்கூடம் நடக்கும் போது
என் விரல்களை தாங்கும்
அவளின் கைகள் இரண்டும்
பிரியாது உறவு இதுவென்று
புரிய வைத்த கணங்கள் அது !

இரைதஅட போன தாயபறவைக்காய்
காத்திருக்கும் குஞ்சுகளாய்
காத்திருந்த நாட்கள் அவளின்
வருகைக்காய் -சுகமான பிரிவுகள்
நியமாக நிழலாகின்றது இன்று

அவளுக்காய் வாழ துடித்த நாட்கள்
என் வீட்டு சுவரில் தொங்கிய நாட்காட்டியின்
நிழல்கள் நனைந்த நாட்கள் கண்ணீரில்
அதனால் கரைந்த நாட்கள் சுகமானதே !

வாழும் போது கடவுள் தந்த
பொக்கிசமாய் இருக்கும்
அவளின் நினைவுகள்
அழியாது அழியும் வரை என்னுடல் !

பிரிவு ஓன்று ..
அவள் திருமணத்தில் ..!
வலிகளை சுமந்த நாட்கள் இதுவென்றாலும்
சுகங்கள் இதயத்தில் புன்னகைக்கும்
தருணங்கள் அது.!
பிரிவினில் வலி -வலியினில் விழி
விழியினில் ஏக்கம்
ஏக்கத்தில் சுகங்கள் .

தங்கையின் நினைவுகள்
அண்ணனின் கனவுகளாய் அல்ல
உயிரின் சுவாசத்தின் சுவடுகள் !

தாஸ்

எழுதியவர் : Thas (22-Sep-12, 1:07 am)
சேர்த்தது : Thas
பார்வை : 184

மேலே