காதலுக்கு பக்கத்தில்

மூன்றாம்பிறையும்
முழுநிலவாய் தெரிகிறது,
பட்டாம்பூச்சியை
ரசிக்க பிடிக்கிறது,
தனிமை பிடிக்கிறது,
கவிதை பிடிக்கிறது,
தமிழ் பிடிக்கிறது,
உன் கண்கள் பிடிக்கிறது,
உன் சிரிப்பு பிடிக்கிறது,
உன் கோவம் பிடிக்கிறது,
கொஞ்சம் பொறு தேவதையே
இப்பொழுதுதான்
காதலுக்கு பக்கத்தில்
வந்திருக்கிறேன்...
விரைவில்
உன் பக்கத்திலும்....

காதலுடன்
ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (23-Sep-12, 1:28 pm)
பார்வை : 112

மேலே