உலக முடிவு

ஆட்டிக்கில் பனி உருகுகிறதாம்
காட்டில் மரங்கள் உருக்குலைகிறதாம்
இங்கே மழை ஏமாற்றுகிறதாம்
எங்கோ வெள்ளம் ஊர் கழுவுகிறதாம்
புதுப்புது நோய்கள் பல்லிழிக்கிறதாம்
மதப்போதனைகள் மதுவூட்டுகிறதாம்
பிணக்குகள் பிணங்களை பிரசவிக்கிறதாம்
கணக்குகள் கடந்து கலி முத்திடிச்சாம்.....

திண்ணைக்கிழவி முணுமுணுத்தாள்
துணைக்கு கடவுளும் வரமாட்டானாம்..
தான்தோன்றி மனிதன் இறைமறந்தால் - அந்த
தாந்தோன்றியானும் எமை வெறுப்பான்....

எழுதியவர் : S.Raguvaran (23-Sep-12, 1:29 pm)
பார்வை : 280

மேலே