"எழுத்து" கு சமர்ப்பணம்....
ஐம்பது என்பது கிரிக்கெட்டில் மைல்கல்
அடியேன் கவிகளும் தொட்டது இன்னொரு படிக்கல்..
தடுமாறும் குழந்தைக்கு
விரலொன்று ஊன்றுகோல் - இந்த
கவியறியா கழுதைக்கும்
"எழுத்து"தான் திறவுகோல்...
தோழர்கள் தோள் தட்டிக்கொடுக்க
உபரியாய் கருத்துக்கள் உரமூட்டி நிற்க
எண்ணங்கள் பரிணமித்து புது
வண்ணங்கள் தேடுகின்றன
இன்னும் சில வரிகளுக்காய்......