மனித வாழ்வு
எத்தனையோ தொடக்கங்கள்
எத்தனையோ முடிவுகள்
யார் யாராலோ ஆரம்பிக்கப்பட்டு
எவர் எவராலோ முடிக்கப்பட்டு
நம்மை பாதிக்கின்றன
இப்படியும் அப்படியுமாக.
சுற்றி வீசும் காற்றுகளில்
தூக்கித் தூக்கி எறியப்படும்
காகிதத் துண்டைப் போல்
புரளுகிறோம்
சொந்த காலில் நிற்க முடியாமல்.