காதல் பட்டு பட்டு விட்டேன்
யாரும் பூக்களை காதலிக்காதீர்கள்
அவைகள் ஒரு நாள் உதிர்ந்து விடும்
நீங்களும் அப்போது உடைந்து விடுவீர்கள்!!
பூ என்றே பெண்ணை பாவித்து
வெறும் நார் என்று தன்னை பாவிக்கும்
குணம் கொண்ட....
ஆண்களில் ஒருவன் நான்..
ஆதங்க பட ஏதும் இல்லை..
ஆதாம் ஏவள் போல் தான்
ஆசையால் ஒன்றியிருந்தேன் ஆனால் அந்த
ஆப்பிளை கடிக்கு முன்னரே அவள் பிரிந்து விட்டாள்...!
என்னிடம் கண்களால் மட்டும் பேசும்
மலர் அவள் !
புன்னகையால் இசையமைக்கும்
புல்லாங்குழல் அவள்!
நீரையும் நீரையும் ஒரு நெருப்பு துண்டு
இணைத்தது அதனை காதல் என்றனர்...!
காதல் செய்தேன்
காதல் செய் தேன்
ம்ம்ம்..தேன் தான்
நான் காயப்பட்டதுண்டு அது வரை காதல் பட்டதில்லை.....
காதல்பட்ட பிறகோ காயப்பட்டவர்களை பார்த்து
ஆறுதல் அடைந்தேன்...
என்ன ஒரு வலி ..
........................
எல்லாம் போலி என்றான் நண்பன்..!
அவன் பெண்ணின் வழி சிறைக்குள் அகப்படதவன்.....
அன்பால் நெய்யப்பட்ட அவளிரு கண்களை மட்டும் அவன் கண் கொண்டு கண்டிருந்தால்
அவளருகிலேயே விட்டு வந்திருப்பான் அவனிரு கண்களை.........
காதல் பட்டு பட்டு விட்டேன்
ஏதோ தோன்றியது காதலை பற்றி எழுதிவிட்டேன்....!!
.....சுதா.....