கண்களை தானம் செய்வோம்

முகிலில் பல விண்மீன்களை படைத்தான்

முகத்தில் பலரின் கண்மீன்களை பறித்தான்

மண்ணுள் புதைந்தால் வீணாகும்

மனிதனுள் புதைந்தால் விதையாகும்

மண்ணுக்கு உரமாவதை விட

மனிதனுக்கு வரமாகட்டும்

வலியின்றி வாழ வழி கொடுப்போம்

வழிகளை கடக்க விழி கொடுப்போம்

கண்களை கொடுப்போம்

கண்ணீரை துடைப்போம்











கண்களை தானம் செய்வோம்
அன்புடன் உங்கள் (ராஜ்கமல்)

எழுதியவர் : ராஜ்கமல் (25-Sep-12, 3:14 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 239

மேலே