தெய்வம்
தியானம் என்பதே காமத்தின் அடிப்படையைக் கொண்டதுதான். அதனாலேயே ஆன்மிகம், மக்கள் சமூகத்திற்கு அதை முழுமையாக விளக்க முடியாமல் திணறுகிறது. செக்சை மையமாக்காமல், ஒரு பெண்ணுடன் காதலில் களித்திருப்பதுயும் தியானம்தான். இதனினை பொதுமக்களுக்குப் புரியவைக்க முயன்று ஆன்மீகவாதிகள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்துத் துறவிகள் தவறானவர்கள் என்று முடிவு கட்டிவிட முடியாது. அது விந்துநாதத்தை வெளியேற்றுதல் சம்பந்தமுள்ளதல்ல. புணர்வதல்ல. அது மேலும் இறுக்கி கெட்டியாக்குதல் சம்பந்தமானது.
இறைவனை எப்படி காணமுடிவதில்லையோ, அதுபோல் தியானத்தையும் சாதாரணக் கண்ணோட்டத்தில் உணரமுடிவதில்லை.
கோவில்களில் இறைவனை இருத்திவைக்கப்பட்ட இடம் கற்பக்ரகம் என்கிறார்கள். அது செக்ஸையும் காமத்தினையும் கட்டிக்காப்பது என்பதையே அடிப்படையாகக் கொண்டது.
சாதரணமாக இவைகளை புரியவைக்கவும் முடிந்ததில்லை ஆன்மீகத்தினால். அதனாலேயே கண்மூடித்தனமாக பலப்பல பழக்கங்களை உருவாக்கிவிட்டார்கள். ஆனாலும் எல்லாவற்றிலும் உண்மைகள் இருக்கின்றன. புரிந்துகொள்ளும் ஆர்வமும், விருப்பமும், பொறுமையும் நம்மிடம் தேவை. அதுதான் இங்கு இல்லாமல் போயிற்று.